வியாழன், 9 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Sasikala

ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கும் உருளைக்கிழங்கு

ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கும் உருளைக்கிழங்கு

உருளையில் அதிக அளவில் ஸ்டார்ச் சத்து உள்ளது. 100 கிராம் உருளை 70 கலோரி  ஆற்றலை உடலுக்கு வழங்குகிறது.
 
* மிக குறைந்த அளவில் கொழுப்பு சத்து உள்ளது. 100 கிராமிற்கு 0.1 கிராம் கொழுப்பு  இதிலுள்ளது. வைட்டமின்கள், தாதுஉப்புகள், நார்ச்சத்து உருளையில் மிகுந்து காணப்படுகிறது.
 
* உருளையில் எளிதில் கரையத்தக்க மற்றும் கரையாத, நார்ச்சத்துக்கள் உள்ளன. எளிதில்  வளர்ச்சிதை மாற்றம் அடையும் நார்ச்சத்துக்கள், மலச்சிக்கலைத் தடுக்கும். கெட்ட  கொழுப்புகளை கரைக்கும்.


 
 
* நார்ச்சத்தானது குடலில் இருந்து ஒற்றைச் சர்க்கரையை உறிஞ்சு கொள்கிறது. மேலும்  ஸ்டார்ச்சை மெதுவாக ஜீரணம் செய்ய உதவுகிறது. இதனால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை  கட்டுக்குள் வைப்பதில் உருளை பங்கெடுக்கிறது.
 
* பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் உருளைக் கிழங்கில் மிகுந்துள்ளது. பைரிடாக்சின்  (வைட்டமின் பி6), தயமின், நியாசின், பான்டோதெனிக் அமிலம் மற்றும் போலேட்டுகள் அடங்கி  உள்ளன.
 
* புத்துணர்ச்சி மிக்க உருளையின் தோலில் நிறைய ஆன்டி ஆக்சிடென்டுகள் உள்ளன.  குறிப்பாக வைட்டமின் சி மிகுந்துள்ளது. 100 கிராம் கிழங்கில் 11.4 மில்லிகிராம் அளவில்  வைட்டமின் சி உள்ளது. பல்வேறு காய் கறிகளில் இருந்தும் தொடர்ச்சியாக உடலுக்கு  வைட்டமின் சி, கிடைப்பது பல்வேறு நோய்த் தொற்றுகளில் இருந்து உடலைக் காக்கும்  வேலையைச் செய்கிறது. ப்ரீ ரேடிக்கல்களையும் கட்டுப்படுத்துகிறது.
 
* அதிக அளவில் இரும்பு, மாங்கனீசு, மெக்னீசியம், பாஸ்பரஸ், தாமிரம், பொட்டாசியம்  போன்ற அத்தியாவசிய தாதுக்களும் உருளையில் அடங்கி உள்ளது.
 
* சிவப்பு மற்றும் பழுப்பு நிற உருளையில் தேவையான அளவில் வைட்டமின் ஏ உள்ளது. இது  சிறந்த நோய் எதிர்ப்பொருளாக செயலாற்றும்.
 
* புற்று நோய் மற்றும் இதய பாதிப்புகளுக்கு எதிராக செயலாற்றும் திறன் உருளையில்  இருப்பதாக நவீன ஆய்வுகள் கூறுகின்றன.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்