1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 23 டிசம்பர் 2022 (21:27 IST)

குழந்தைகளை தாக்கும் நிமோனியா.. பாதுகாப்பது எப்படி?

fever
மழைக்காலத்தில் குழந்தைகளுக்கு நிமோனியா என்ற காய்ச்சல் அதிகம் பாதிக்கப்படும் நிலையில் குழந்தைகளை இந்த காய்ச்சலில் இருந்து எப்படி பாதுகாப்பது என்பது குறித்து தற்போது பார்ப்போம்
 
5 வயது வரை தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருக்கும். எனவே குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் 
 
மேலும் வீட்டில் விறகு அடுப்பு இருந்தால் குழந்தைகள் அந்த புகையை சுவாசிக்கும் போது நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் என்றும் அப்போது நிமோனியா தாக்குவதற்கு அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
 
மேலும் காய்ச்சல் இருமல் ஆகியவை குழந்தைகளுக்கு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி தகுந்த வைத்தியம் பார்க்க வேண்டும் என்றும் அதை கவனிக்கத் தவறினால் அந்த கிருமிகள் நுழைந்து ஆபத்தை விளைவிக்கும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்
 
எனவே நிமோனியா காய்ச்சலில் இருந்து குழந்தைகளை தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மருத்துவரின் அறிவுரைப்படி கவனித்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது
 
Edited by Siva