செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By
Last Updated : புதன், 21 மார்ச் 2018 (19:59 IST)

தன்னம்பிக்கையை மீட்க உதவும் மெடிக்கல் டாட்டூ!

சரும தொற்றுகள், தழும்புகள் போன்றவையால் ஏற்படும் சங்கடங்களை போக்க இந்த மெடிக்கல் டாட்டூ உதவுகிறது.

 
சருமத்தில் ஏற்படும் தொற்றுகள், புழுவெட்டு, அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஏற்படும் தழும்புகள் போன்றவை பெரும்பாலும் மன சங்கடங்களை ஏற்படுத்தும். இதனால் சிலர் தன்னம்பிக்கையை இழக்கவும் நேரிடுகிறது. இவைகளை போக்கி தன்னம்பிக்கையை மீட்டெடுக்க இந்த மெடிக்கல் டாட்டூ உதவுகிறது.
 
மெடிக்கல் டாட்டூ சருமம் நிறம் மாறியதை மறைக்க மட்டுமே பயன்படும். இதற்கென தனியாக ஒவ்வாமை ஏற்படுத்தாத மையைப் பயன்படுத்துகிறார்கள். இந்த மெடிக்கல் டாட்டூக்களை மருத்துவமனைகள் தவிர வேறெங்கும் போட்டுக்கொள்ள முடியாது.
 
சாதாரண டாட்டூக்களைப் போல் இவற்றைப் போட்டுவிட முடியாது. 16 வயது நிரம்பியவர்களுக்கு மட்டுமே இந்த மெடிக்கல் டாட்டூ போடப்படும். அந்த வயதில்தான் நம் சருமம் முழு வளர்ச்சி அடைந்திருக்கும்.