திங்கள், 11 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 6 செப்டம்பர் 2021 (16:48 IST)

பலாப்பழத்துடன் நாட்டுச் சர்க்கரை - டேஸ்டி & ஹெல்தி!!

பலாவில் வைட்டமின் ’A’ நிறைந்திருக்கிறது. இந்த வைட்டமின் உடல் நலத்திற்கும், குறிப்பாக கண்பார்வையின் நலத்திற்கு மிகவும் அவசியமாகும். 
 
பலாவில் அதிக அளவில் வைட்டமின் சி இருப்பதால், அவை உடலைத் தாக்கும் வைரஸ் மற்றும் பாக்டீரியாவை எதிர்த்து, உடலுக்கு நல்ல பாதுகாப்பைத் தரும். குறிப்பாக வைட்டமின் சி, ரத்ததில் உள்ள வெள்ளையணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் தன்மையுடையவை. 
 
கண்பார்வை மங்குதல், மாலை கண் நோய் போன்றவை இந்த சத்து குறைபாடுகளால் ஏற்படுகின்றன. எனவே கண்களின் நலம் பேண பலாப்பழங்களை சாப்பிட்டு வருவது நல்லது.
 
தைராய்டு சுரப்பி சமநிலையில் இயங்குவதற்கு உடலில் செம்பு சத்து இருக்க வேண்டியது அவசியம். பலாப்பழத்தில் செம்பு சத்து அதிகம் உள்ளது. 
 
பலாவில் பொட்டாசியம் அதிகம் உள்ளதால் சிறுநீரக கோளாறு உள்ளவர்கள் மருத்துவர்களின் பரிந்துரையின்பேரில் சாப்பிடலாம்.
 
பலாப்பழத்தில் டயட்டரி கொழுப்புக்கள் அதிகம் இருப்பதால், அவை குடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, குடல் புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பு  அளிக்கிறது.
 
நார்ச்சத்து அதிகம் உள்ள பழம் என்றால் அது பலாப்பழமே. இதில் கலோரி குறைவாக இருப்பதால் இதய நோய் இருப்பவர்களுக்கு சிறந்த மருத்துவ குணம் வாய்ந்த  பழம். நெய் அல்லது தேன் கலந்து பலாப்பலத்தைச்  சாப்பிட்டால் இதயம், மூளை வளர்ச்சியடையும், நரம்புகளும் வலுப்படும்.. உடலும் ஊட்டம் பெறும்.
 
பலாப்பாழத்தை முறையுடன் சாப்பிட்டால் கெடுதல் இருக்காது. பலா பழத்தை சாப்பிட்ட உடன், சிறிது நெய் அல்லது கொஞ்சம் பாலை அருந்தினால் எந்த தொல்லைகளும் ஏற்படாது. 
 
வெறும் பலாப்பழத்தை சாப்பிடாது சிறிது நாட்டுச்சர்க்கரையை கலந்து சாப்பிட உடல்புத்துணர்ச்சி பெறும். தாகம் தணியும். எளிதில் சீரணமாகும். குடலுக்கு வலிமை தரும்.