1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 16 ஜனவரி 2021 (09:58 IST)

மோர் தானேனு ஈசியா சொல்லாதீங்க... எவ்வளவு நன்மைகள் இருக்கு தெரியுமா??

மோர் குடிப்பதால் என்ன நன்மை கிடைக்கும் என்று பலரும் அறிந்துக்கொள்ளாமல் இருக்கின்றனர். இதன் பயன்கள் இதோ... 

 
வயிறு எரிச்சல் இருக்கும் போது, ஒரு டம்ளர் மோர் குடித்து வந்தால், வயிறு குளிர்ச்சியடையும்.
 
அடிக்கடி நெஞ்செரிச்சலால் அவதியுறுபவர்கள் இதனை அன்றாட உணவில்  சேர்த்துக் கொள்ள வேண்டும். 
 
மோர் ஜீரணத்திற்கு அதிகம் உதவுவது. அதிக ஏப்பம் ஏற்படுவதினை தடுக்கிறது. 
 
உணவு உண்டபின் மோர் குடிக்கும்பொழுது நெய், வெண்ணெய், ஆலிவ் எண்ணெய் இவற்றினை உணவு குழாயில் இருந்து கழுவி எடுத்து விடுகின்றது.
 
பொட்டாசியம், வைட்டமின் ’பி’ சத்து, மற்ற வைட்டமின்கள் தாது உப்புகள் கொண்டது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தியினை  கூடுகின்றது. 
 
தூக்கம் நன்கு வரும். ஹார்மோன்கள் சீராக வேலை செய்யும்.
 
 கொழுப்பினை குறைக்கின்றது. இரத்த அழுத்தம் சீராய் இருக்க உதவுகின்றது.
 
புற்று நோயை தவிர்க்கின்றது. உடலில் நீர் வற்றாமல் இருக்கச் செய்கின்றது.
 
உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு மோர் சிறந்த பானமாகும். பசியைக் கட்டுப்படுத்தும் சிறந்த பானமாகவும் இது விளங்குகிறது.