1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 15 ஆகஸ்ட் 2020 (14:28 IST)

தொலைந்த தூக்கத்தை திரும்ப பெற... இதெல்லாம் சாப்பிடுங்க!!

தூக்கமின்மையால் அவதிபடுபவர்கள் பின்வரும் உணவுகளை சாப்பிட்டால் தூக்க உணர்வை நன்றாக தூண்டும். 
 
வாழைப்பழத்தில் உள்ள டிரிப்டோபன் அமினோ அமிலம் தூக்கத்தை வரவழைக்கும் வேதிப்பொருட்களை உருவாக்க உதவும்.
 
சாமந்தி டீ பருகுவதால் மூளைக்கு செல்லும் நரம்புகளின் செயல்பாடுகள் தூண்டப்பட்டு ஆழ்ந்த தூக்கம் வரும். 
 
வெறுமனே பாலை பருகாமல் அதில் சிறிதளவு மஞ்சள், குங்குமப்பூ கலந்து பருகினால் நன்றாக தூக்கம் வரும். 
 
குறிப்பாக நடைப்பயிற்சி, யோகா செய்பவர்கள் பால் பருகி வந்தால் எந்த இடையூறுமின்றி நன்றாக தூங்கி எழலாம்.
 
ஓட்ஸ் சாப்பிட்டுவந்தால் ஆரோக்கியம் மேம்படுவதோடு ஆழ்ந்த தூக்கத்தையும் தூண்டும்.