வியாழன், 28 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 5 ஜனவரி 2024 (18:30 IST)

காலாவதி ஆன உணவுப்பொருட்களை சாப்பிட கூடாது என சொல்வது ஏன்?

உணவுப் பொருள்கள் காலாவதி ஆகிவிட்டால் அது எவ்வளவு பெரிய மதிப்புடைய பொருளாக இருந்தாலும் அதை குப்பைத் தொட்டியில் போட்டு விட வேண்டும். அதை சாப்பிடுவதால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும் என்று கூறப்படுகிறது.  
 
பொதுவாக உணவு பொருள் வாங்கும்போது காலாவதி தேதி கடந்து விட்டதா என்பதை பார்த்து வாங்க வேண்டும். காலாவதி தேதி இருந்தாலும் அதை நாம் பிரிட்ஜில் நீண்ட நாள் வைத்திருந்தாலும்  நாம் உணவு பொருளை பயன்படுத்தும் போது  காலாவதி தேதி இருக்கிறதா என்பதை கவனிக்க வேண்டும். 

 
உலர்ந்த நிலையில் உள்ள நட்ஸ் போன்றவை காலாவது தேதியை கடந்திருந்தாலும் பார்க்க நன்றாக இருக்கும். ஆனால் கண்ணுக்கு தெரியாத பூஞ்சைகள் அதில் இருக்கும் என்பதால் காலாவதியான உணவுகளை சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள். 
 
காலாவதி ஆன உணவுகளில் பாக்டீரியா வைரஸ் பூஞ்சை ஆகியவை இருக்கும் என்பதால் அதை சாப்பிட்டால் வாந்தி குமட்டால் வயிற்றுப்போக்கு காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும்
 
Edited by Mahendran