செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 28 நவம்பர் 2023 (18:46 IST)

குழந்தைகளுக்கு காது குத்தும் போது கவனிக்க வேண்டியது.. அறிவியல் காரணம் என்ன?

குழந்தை பிறந்தவுடன் காது குத்துவதை ஒரு சடங்காக நம் முன்னோர்கள் நடத்தி வரும் நிலையில் அதை நாமும் தற்போது பின்பற்றி வருகிறோம். ஆனால் இது ஒரு அறிவியல் பூர்வமான உண்மை என்று கூறப்படுகிறது.

குழந்தை பருவத்தில் காது குத்துவது மூளையின் ஆரோக்கியமான விரைவான வளர்ச்சிக்கு உதவும் என்றும்  கூறப்படுகிறது. குழந்தைகளுக்கு டெட்டனஸ் என்ற தடுப்பூசி போட்ட பிறகுதான் காது குத்த வேண்டும்.

10 வயதுக்குள் காது குத்துவது சரியானது. காது குத்திய உடன் முதலில் லேசான மெல்லிய காதணிகளை அணிவிக்க வேண்டும்.  கிருமி தொற்று ஏற்படுவதை தடுக்க  காது குத்தும் நபர் கையுறைகளை அணிந்து கொள்ள வேண்டும்.

காது குத்திய உடன் தங்கம் அல்லது வெள்ளி காதணிகளை அனுபவிப்பது நல்லது. காது குத்துவது அழகுக்காக அல்லது பழக்க வழக்கத்துக்கு செய்யப்படவில்லை. காது குத்துவதற்கு பின் பல நிரூபிக்கப்பட்ட அறிவியல் மற்றும் மருத்துவம் சார்ந்த நன்மைகள் உள்ளது என்று முன்னோர்கள் தெரிவித்துள்ளனர்

Edited by Mahendran