செவ்வாய், 30 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 20 ஜனவரி 2023 (21:42 IST)

குழந்தைகளை குளிப்பாட்டும்போது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்!

baby
குழந்தைகளை குளிப்பாட்டும் போது அதுவும் குளிர் காலத்தில் குளிப்பாட்டும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்
 
குளிர்காலத்தில் குழந்தைகளை அடிக்கடி குளிப்பாட்ட வேண்டிய அவசியமில்லை என்றும் ஸ்பாஞ்ச் மூலம் உடலை துடைத்து சுத்தம் செய்து கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது. 
 
ஒருவேளை குளிப்பாட்ட வேண்டும் என்று முடிவு செய்தால் சூடான வெந்நீரை பயன்படுத்துவதை தவிர்க்கவும். ஏனெனில் குழந்தையின் தோல் சூடான வெந்நீரால் சேதமடையும். எனவே சூடான வெந்நீரில் இல்லாமல் வெதுவெதுப்பான நீரில் குழந்தையை குளிப்பாட்ட பயன்படுத்த வேண்டும்
 
பெரும்பாலும் குழந்தையை குளிர்ந்த தண்ணீரில் குளிப்பாட்டுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். குளிர்ந்த நீரில் குளிக்க வைத்தால் குழந்தைக்கு சளி காய்ச்சல் உள்பட சில உபாதைகள் வரலாம். 
 
குழந்தையின் உடல்நிலை பேணுவதற்கு அவ்வப்போது எண்ணெய் மசாஜ் செய்யலாம் குழந்தைகளுக்கான தரமான எண்ணெய் வாங்கி குழந்தைகளுக்கு மசாஜ் செய்தால் குழந்தைகளுக்கு மிகவும் நல்லதாக இருக்கும் 
 
அதே போல் குளிர்காலத்தில் குழந்தைகளை பாதுகாக்க சரியான ஆடைகளை பயன்படுத்த வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva