1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. கட்டுரைகள்
Written By
Last Modified: ஞாயிறு, 6 மே 2018 (11:06 IST)

இரவில் அசைவம் நல்லதா? கெட்டதா?

இரவு நேரங்களில் அசைவ உணவுகளைத் தவிர்க்க வேண்டும். அசைவ உணவுகள் சுவையாக இருப்பதால் பலராலும் விரும்பி சாப்பிடப்படுகிறது. ஆனால் இரவில் அசைவம் சாப்பிடுவது உடலுக்கு நல்லதல்ல.



அசைவ உணவுகள் ஜீரணமாவதற்கு தாமதமாகும். தவிர இரவில் உடல் உழைப்பு ஏதும் இல்லை என்பதால், நிம்மதியான உறக்கத்தை விரும்புவோர் அசைவத்தை இரவில் தவிர்ப்பது நல்லது.

மேலும் உடல் நலத்துக்கும் தீங்கானது.

செரிமானம் ஆகாமல் போகும்பட்சத்தில், வாந்தி, வயிற்று வலி போன்ற தேவையற்ற பக்க விளைவுகள் ஏற்படலாம். ஆஜீரணக் கோளாறில் இருந்து விடுபட அசைவ உணவுக்குப் பின் வாழைப்பழங்கள் சாப்பிடலாம்.

எனினும் பொதுவாக இரவு நேரங்களில் சிக்கன், மட்டன், மீன் ஆகியவற்றை தவிர்ப்பதே சிறந்தது.