ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 14 மார்ச் 2019 (20:58 IST)

மாஸ்க்டு ஆதார் என்றால் என்ன? எப்படி டவுன்லோட் செய்வது?

ஆதார் அட்டையின் பாதுகாப்பு குறித்து பல கேள்விகள் முவைக்கப்பட்டு வரும் நிலையில், ஆதார் தகவலின் பாதுகாப்பான பயன்பாட்டை கருதி மாஸ்க்டு ஆதார் (Masked Aadhaar) என்ற ஒன்று நடைமுறைக்கு வந்துள்ளது. 
ஆம், ஆதார் அட்டையில் இருக்கும் ஆதார் எண்ணின் 12 இலக்கங்களும் வெளிப்படையாக இருக்கும். இதற்குப் பதிலாக சில இலக்கங்கள் மட்டும் மறைக்கப்பட்ட ஆதாரை டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம். இதுதான் மாஸ்க்டு ஆதார் எனப்படுகிறது. 
 
ஆதார் அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் மாஸ்க்டு ஆதாரை டவுன்லோட் செய்யலாம். இதனை ஆதார் ஆணையத்தின் இணையதளத்தில் இருந்தே டவுன்லோட் செய்யலாம். 
 
ஆனால், டவுன்லோட் செய்யும்போது Regular Aadhaar, Masked Aadhaar என இரண்டு அப்ஷன் வரும். அதில், மாஸ்க்டு ஆதார் என்பதை தேர்வு செய்து டவுன்லோட் செய்யும்போது சில தகவல்கள் மறைக்கப்பட்டு பிரிண்ட் ஆகும். 
 
மாஸ்க்டு ஆதாரை ஓய்வூதியம், சிலிண்டர் மானியம் போன்ற அரசு திட்டங்களுக்கு பயன்படுத்த கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.