வெண்கலத்தில் இருந்து டைட்டானியம் வரை... ஒன்று விடாமல் அள்ளிக்கொடுக்கும் அம்பானி!
ரிலையன்ஸ் ஜியோ ஜிகா ஃபைபர் சேவையில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஆறு ப்ரீபெய்ட் திட்டங்களை பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள்.
ரிலையன்ஸ் பொதுக்கூட்டத்தில் அந்நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி ஜியோ ஜிகா ஃபைபர் செப்.5 ஆம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வரும் என அறிவித்தார். இந்த அறிவிப்போடு சில இலவசங்களையும் அறிவித்தார்.
அம்பானி சொன்னபடி ஜியோ ஃபைபர் சேவை செயல்பாட்டிற்கு வந்துவிட்டது. இந்நிலையில் இந்த சேவையின் கீழ் வழங்கப்பட்டுள்ள ஆறு ப்ரீபெய்ட் திட்டங்களை பற்றியும் அவற்றின் நன்மைகளையும் பற்றிய தொகுப்பே இது...
-
வெண்கலம் மாதத்திற்கு ரூ.699 ரீசார்ஜ், 100Mbps டேட்டா வேகத்தை வழங்கும்.
-
வெள்ளி மாதத்திற்கு ரூ.849 ரீசார்ஜ், 100Mbps டேட்டா வேகத்தை வழங்கும்.
-
தங்கம் மாதத்திற்கு ரூ.1,299 ரீசார்ஜ், 250Mbps டேட்டா வேகத்தை வழங்கும்.
-
டயமண்ட் மாதத்திற்கு ரூ.2,499 ரீசார்ஜ், 500Mbps டேட்டா வேகத்தை வழங்கும்.
-
பிளாட்டினம் மாதத்திற்கு ரூ.3,999 ரீசார்ஜ், 1Gbps டேட்டா வேகத்தை வழங்கும்.
-
டைட்டானியம் மாதத்திற்கு ரூ.8,499 ரீசார்ஜ், 1Gbps டேட்டா வேகத்தை வழங்கும்.
இந்த மாதாந்திர திட்டங்களுடன், ஜியோ பைபர் 3 மாத, 6 மாத மற்றும் 12 மாத திட்டங்களையும் வழங்கியுள்ளது. அதோடு, ஆரம்பத்தில், தேர்வு செய்யப்படும் திட்டத்தைப் பொறுத்து 250 ஜிபி வரை இலவச கூடுதல் அதிவேக தரவையும் வழங்குகிறது.