வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 3 மே 2019 (16:14 IST)

விலை குறைந்தது சாம்சங் ஸ்மார்ட்போன்(ஸ்)!!!

கொரிய நிறுவனமான சாம்சங் தனது ஸ்மார்ட்போன்கள் மீதான விலை குறைப்பை அவ்வப்போது வழங்கி வருகிறது. 
அந்த வகையில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட சாம்சங் கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் மீது விலை குறைப்பை அறிவித்துள்ளது. ஆம் சாம்சங் கேல்கஸி ஏ, கேலக்ஸி ஏ10, கேல்கஸி ஏ30 மற்றும் கேலக்ஸி ஏ20 ஆகிய ஸ்மாட்போன்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. 
 
1. சாம்சங் கேல்கஸி ஏ ஸ்மார்ட்போன் விலை அதிகபட்சமாக ரூ.1500 வரை குறைக்கப்பட்டுள்ளது. 
2. சாம்சங் கேலக்ஸி ஏ10 ஸ்மார்ட்போன் விலை ரூ.500 குறைக்கப்பட்டுள்ளது.
3. சாம்சங் கேலக்ஸி ஏ320 ஸ்மார்ட்போன் விலை ரூ.1000 குறைக்கப்பட்டுள்ளது.
4. சாம்சங் கேலக்ஸி ஏ30 ஸ்மார்ட்போன் ரூ.1500 குறைக்கப்பட்டுள்ளது.
இந்த விலை குறைப்பு அமேசான் வலைத்தளத்தில் செயல்பாட்டில் உள்ள நிலையில், விரைவில் ப்ளிப்கார தளத்திலும் கொண்டுவரப்படும் என தெரிகிறது. 
 
இதற்கு முன்னர் சாம்சங் கேலக்ஸி ஏ9 (2018), கேலக்ஸி ஏ7 (2018), கேலக்ஸி ஜெ6 மற்றும் கேலக்ஸி எஸ்9 பிளஸ் உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களின் விலையையும் சாம்சங் நிறுவனம் குறைத்தது.