திங்கள், 18 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 1 செப்டம்பர் 2016 (11:07 IST)

ஆப்-டு-ஆப் கால் ரூ.1க்கு: ரிலையன்ஸ் அதிரடி

இந்தியாவின் டெலிகாம் சேவைகளில் ஒன்றான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் 'கால் ட்ராப்ஸ் கே சுட்கரா' (Call Drops se Chutkara) என்ற புதிய திட்டத்தை தொடங்கியுள்ளது. அதாவது ரூ.1/-க்கு 300 நிமிட ஆப்-டு-ஆப் கால் என்ற அதிரடி சலுகையை ரிலையன்ஸ் அறிவித்துள்ளது.


 
 
இத்திட்டத்தில் ப்ரீபெயிட் வாடிக்கையாளர்கள் வெறும் ரூ.1/- என்ற அறிமுக விலையில் 300 நிமிடங்களுக்கான ஆப்-டு-ஆப் அழைப்புகளை பெற்றுக்கொள்ளலாம். டேட்டா அடிப்படையிலான இந்த அழைப்புகள் 850 மெகாஹெர்ட்ஸ் அதிர்வெண் பேண்ட் பயன்படுத்தி கையாளப்படுகிறது.
 
நாள் ஒன்றிற்கு 7 எம்பி டேட்டா வழங்கப்படும் அதாவது 10 நிமிட ஆப்-டு-ஆப் அழைப்புகளை நிகழ்த்தப் போதுமான தரவு. வழங்கப்படும் டேட்டாவை ப்ரவுஸிங் செய்யவும் பயன்படுத்திக் கொள்ளாலாம். கொடுக்கப்பட்ட 7 எம்பி டேட்டா, பயன்படுத்தப்படாமல் போனால் அந்த நாள் இறுதியில் அது காலாவதியாகிவிடும்.
 
இந்த புதிய திட்டத்தின் கீழ் இன்ஸ்டன்ட் மெஸேஜ் மற்றும் வாட்ஸ்ஆப், வைபர், கூகுள் ஹாங்அவுட்ஸ், ஸ்கைப் போன்ற காலிங் ஆப்ஸ்கள் மிகப்பிரபலமாக்கப்படும் என்று ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நம்புகிறது.