வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 6 செப்டம்பர் 2018 (15:58 IST)

வரலாற்றில் இல்லாத அளவுக்கு சரிந்த இந்திய ரூபாய் மதிப்பு!

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாற்றி இல்லாத அளவுக்கு சரிவை சந்தித்துள்ளது.

 
அமெரிக்காவில் அதிபர் டொனால்டு டிரம்ப் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரிகளை அதிகரித்து வருவதால். இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இன்றைய இந்திய ரூபாயின் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு சரிவை சந்தித்துள்ளது.
 
நேற்று இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.71.6 என்ற அளவில் இருந்தது. இன்று மதியம் நிலவரப்படி அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் மதிப்பு ரூ.72.08 என்ற அளவில் இருந்தது.
 
இந்நிலையில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, இந்த விவரங்களை உன்னிப்பாக கவணித்து வருவதாகவும், நிலைமை விரைவில் சீரடையும் என்றும் தெரிவித்துள்ளார்.