செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 21 டிசம்பர் 2016 (16:50 IST)

அடிமைப்படுத்திய இங்கிலாந்தை 150 ஆண்டுகளுக்கு பின் வீழ்த்திய இந்தியா!!

உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக 150 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா உயர்ந்திருப்பதாக போர்ப்ஸ் தெரிவித்துள்ளது.


 
 
உலகின் பொருதாரவளர்ச்சி பெற்ற நாடுகளாக கருதப்படும் அமெரிக்கா, சீனா, ஜப்பான் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு அடுத்து பெரிய பொருளாதார நாடாக இந்தியா உயர்ந்திருக்கிறது.
 
2020-ம் ஆண்டு இந்தியா ஐந்தாவது இடத்துக்கு வரும் என முன்னதாக போர்ப்ஸ் கணித்திருந்தது. ஆனால் கடந்த ஒரு ஆண்டில் பவுண்ட் மதிப்பு 20 சதவீதம் சரிந்ததை அடுத்து நான்கு வருடங்கள் முன்னதாகவே அது நடந்துள்ளது.
 
மேலும், இந்தியா இங்கிலாந்தின் பொருளாதார வளர்ச்சியை முறியடித்து முன்னிலை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் சில ஆண்டுகளுக்கு இந்திய பொருளாதாரம் ஆண்டுக்கு 6 முதல் 8 சதவீதம் வரையிலான வளர்ச்சியை காணும். ஆனால் இங்கிலாந்து பொருளாதாரம் 1 முதல் 2 சதவீத வளர்ச்சியை மட்டுமே அடையும் என கணக்கிடப்பட்டுள்ளது.