செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 8 மே 2020 (16:31 IST)

பட்ஜெட் ரேஞ்சில் வேளியாகும் ஹானர் 9 எக்ஸ் ப்ரோ!!

ஹூவாயின் ஹானர் பிராண்டு ஹானர் 9 எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகவுள்ளது.  
 
ஹானர் 9 எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் ஏற்கனவே அறிமுகம் ஆன நிலையில், இந்த ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் மே 12 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
 
இந்தியாவில் புதிய ஹானர் 9 எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.15,000 - ரூ. 20,000 நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இதன் சிறப்பம்சங்கள் பின்வருமாறு...
 
ஹானர் 9எக்ஸ் ப்ரோ சிறப்பம்சங்கள்:
# 6.59 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி பிளஸ் வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
# ஆக்டா-கோர் கிரின் 810 பிராசஸர், ARM மாலி MP6 GPU
# 6 ஜிபி ரேம்,  256 ஜிபி மெமரி
# ஆண்ட்ராய்டு 9 பை மற்றும் EMUI, HMS
# டூயல் சிம் ஸ்லாட்
# 48 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.8
# 8 எம்பி அல்ட்ரா வைடு சென்சார், f/2.4
# 2 எம்பி டெப்த் கேமரா, f/2.4
# 16 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2
# பக்கவாட்டில் கைரேகை சென்சார்
# 4000 எம்ஏஹெச் பேட்டரி, 10 வாட் சார்ஜிங்