ஆன்லைனில் செல்போன் ஆர்டர் செய்தவருக்கு செங்கல் அனுப்பிய நிறுவனம்
சென்னை ஐஐடியில் படித்து வரும் மாணவி, முன்னனி இணையதள வர்த்தக நிறுவனத்தில் செல்போன் ஆர்டர் செய்துள்ளார். ஆனால் அவருக்கு செல்போனுக்கு பதில் செங்கல் கிடைத்துள்ளது.
சென்னை ஐஐடியில் படித்து வரும் மாணவி ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன் ரூ.14,000 மதிப்புள்ள செல்போன் ரூ.12,000க்கு விறகப்படுவதாக குறிப்படப்பட்டு இருந்துள்ளது. இந்திய முன்னணி இணைய வர்த்தக நிறுவனத்தில் செல்போன் ஆர்டர் செய்துள்ளார்.
ஆனால் செல்போனுக்கு பதில் அவருக்கு செங்கல் கிடைத்துள்ளது. இதுதொடர்பாக அவர் சம்பந்தபட்ட நிறுவனம் தனது பணத்தை திருப்பி தராவிட்டால் வழக்கு தொடர போவதாக தெரிவித்துள்ளார்.