செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 26 அக்டோபர் 2016 (14:11 IST)

ஆயுள் காப்பீட்டிற்கு எதிரான கடன் பெறலாமா??

ஆயுள் காப்பீட்டிற்கு எதிரான கடன் எளிதாகக் கிடைக்கின்றது. மற்றும் அனைத்து முக்கிய ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள், தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் காப்பீட்டுக்கு எதிராகக் கடன் வழங்குகின்றன. 


 
 
காப்பீட்டு பாலிசியானது, கடனுக்கு எதிரான ஒரு பாதுகாப்பு வளையமாகச் செயல்படுவதால், இந்த வகை கடன்களில், தனி நபர் கடன் போன்று அல்லாமல், வட்டி விகிதம் மற்றும் பிற கட்டணங்கள் மிகவும் குறைவு.
 
ஆயுள் காப்பீட்டு திட்டங்களான என்டொவ்மெண்ட் திட்டங்கள், மணி பேக் திட்டங்கள், மற்றும் யூலிப் திட்டங்களுக்கு எதிராகக் கடன் கிடைக்கும்.
 
டெர்ம் திட்டங்களுக்கு எதிராகக் கடன் கிடைப்பதில்லை. ஏனெனில் டெர்ம் திட்டங்களுக்கு பண மதிப்பு இருப்பதில்லை. அதோடு டெர்ம் திட்டங்களில் வருமானம் கிடைப்பதில்லை. 
 
எவ்வளவு கடன் கிடைக்கும்?
 
ஆயுள் காப்பீடுக்கு எதிரான கடன்களைப் பொருத்தவரை செலுத்திய பிரீமியத்தின் மொத்த தொகையில் சுமார் 70 முதல் 75 சதவீதம் வரை உங்களுக்குக் கடன் கிடைக்கும். 
 
உத்தரவாத பாரம்பரிய திட்டங்களைப் பொருத்தவரை சுமார் 85 முதல் 90 சதவீதம் வரை கடன் கிடைக்கும். 
 
எவ்வாறு கடன் பெறுவது?
 
ஆயுள் காப்பீட்டு பாலிசிக்கு எதிராகக் கடன் பெற, ஒரு முன் குறிப்பிட்ட படிவத்தைப் பூர்த்தி செய்து தாக்கல் செய்ய வேண்டும். 
 
அசல் ஆயுள் காப்பீட்டு பாலிசியை சமர்ப்பிக்க வேண்டும். அதோடு ஒரு பத்திரத்தில் காப்பீட்டு பாலிசியின் நன்மைகள் அனைத்தும் கடன் நிலுவையில் இருக்கும் காலத்தின் போது, வங்கி அல்லது காப்பீட்டு நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட வேண்டும் என்று எழுதிக் கையெழுத்திட்டு அந்தப் பத்திரத்தையும் சமர்ப்பிக்க வேண்டும்.
 
கடன் தொகையைத் திரும்பி செழுத்தும் வரை, காப்பீடு பாலிசி, கடனுக்கு எதிரான பாதுகாப்பாக விளங்கும். 
 
வட்டி:
 
கணக்கீட்டு நிபந்தனையுடன் ஆண்டிற்கு சுமார் 9 சதவீத வட்டி வசூலிக்கிறது. வங்கிக் கடன் வட்டி விகிதங்கள் காப்பீட்டு வகையைப் பொருத்து சுமார் 10 சதவீதத்தில் இருந்து 14% வரை மாறுபடுகின்றன.