டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கும் புதிய வரி? மத்திய அரசின் அடுத்த அதிரடி!!
மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளுக்கு பின்னர் அனைவரும் கூறிய பேச துவங்கிய ஒன்று டிஜிட்டல் இந்தியா மற்றும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை பற்றிதான்.
டிஜிட்டல் பரிவர்த்தணையில் பல சிக்கல்கள், குளறுபடிகள் இருந்தாலும் அதைதான் பயன்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் வந்துவிட்டது.
தற்போது டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளின் பாதுகாப்பிற்காக, டிஜிட்டல் செஸ் (Digital Cess) என்னும் வரியை அமல்படுத்த அரசு ஆலோசித்து வருகிறதாம்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர் ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகள், இ-வாலட்களின் பயன்பாடு, இணைய வங்கி சேவைகளின் பயன்பாடு எண்ணிக்கை உயர்ந்துள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என தெரிகிறது.
டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளின் கட்டமைப்பை வலுப்படுத்தவும், பாதுகாப்பை அதிகரிக்கவும் கூடுதலாக வரி விதிப்பது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.