ரூ.6,900 கேஷ்பேக்: ஒன் பிளஸ் ஸ்மார்ட்போன் பர்ப்பிள் எடிஷன் ஆஃபர்!
இந்திய சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வரும் பல ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனக்களுக்கு மத்தியில், ஆப்பிள் நிறுவனத்திற்கு போட்டியாக ஒன் பிளஸ் நிறுவனம் உருவெடுத்துள்ளது.
சமீபத்தில் ஒன்பிளஸ் 6டி தன்டர் பர்ப்பிள் எடிஷன் ஸ்மார்ட்போன் அமேசான், ரிலையன்ஸ் டிஜிட்டல், க்ரோமா மற்றும் அதிகாரப்பூர்வ ஒன்பிளஸ் விற்பனை மையங்கள் ஒன் பிளஸ் ஆன்லைன் தளத்தில் விற்பனைக்கு வந்தது.
ஒன் பிளஸ் 6டி ஸமார்ட்போன் சிறப்பம்சங்கள்:
# 6.41 இன்ச் 2340×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19.5:9 ஆப்டிக் AMOLED டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 6
# 2.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 10nm பிராசஸர்
# 6 ஜிபி / 8 ஜிபி ராம், 128 ஜிபி / 256 ஜிபி மெமரி
# 16 எம்பி பிரைமரி கேமரா, சோனி IMX519 சென்சார்
# 20 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, சோனி IMX376K சென்சார், F/1.7 அப்ரேச்சர்
# 16 எம்பி சோனி IMX371 செல்ஃபி கேமரா
# டூயல் சிம் ஸ்லாட், இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், வாட்டர் ரெசிஸ்டன்ட் வசதி
# 3700 எம்ஏஹெச் பேட்டரி
சிறப்பு சலுகைகள்:
1. ஒன் பிளஸ் 6டி ஸமார்ட்போன் வாங்கும் போது தேர்வு செய்யப்பட்ட வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட்டுகளுக்கு ரூ.1,500 கேஷ்பேக் வழங்கப்படும்.
2. அமேசான் மற்றும் ஒன் பிளஸ் பிரத்யேக ஆஃப்லைன் விற்பனை மையகங்களில் 3 மாதங்கள் வட்டியில்லா தவணை முறை வசதி
3. ஜியோ பயனர்கள் ரூ.299 சலுகையை தேர்வு செய்யும் போது ரூ.5,400 வரை உடனடி கேஷ்பேக், ரூ.150 மதிப்புள்ள 36 வவுச்சர்கள் வடிவில் வழங்கப்படும்.