அம்பானிக்கு என்ன கொம்பா மொளச்சி இருக்கு..? போராட்ட கோதாவில் குதிக்கும் பிஎஸ்என்எல்
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ தொலைத்தொடர்பு துறையில் வருகை தந்ததற்கு பிறகு பெரும் நஷ்டத்தை சந்தித்து வரும் மற்ற நெட்வொர்க் நிறுவனங்களுள் பிஎஸ்என்எல் நிறுவனமும் ஒன்று.
பொதுத்துறை நெட்வொர்க் நிறுவனமான பிஎஸ்என்எல் விரைவில் தனியார் மயமாக்கப்படலாம் என்ற தகவலும் சில காலங்களாகவே இருந்து வருகிறது. இந்நிலையில், ஜியோவிற்கு வழங்கபப்டும் சலுகைகளை எதிர்த்து பிஎஸ்என்எல் அதிகாரிகள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனராம்.
ஆம், கன்னியாகுமரியில் ஜியோ நிறுவனத்திற்கு மத்திய அரசு அளித்து வரும் ஆதரவை எதிர்த்தும், தனியார்மயமாக்களை கைவிட கோரியும், 4G அலைக்கற்றையை ஒதுக்க வலியுறுத்தியும் வரும் 18, 19, 20 ஆகிய தேதிகள் பிஎஸ்என்எல் நிறுவன ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் மத்திய அரசு முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்கு அளித்து வரும் ஆதரவை பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு வழங்காத்தால் அந்நிறுவனம் அதிக வளர்ச்சியை அடைந்துள்ளதாகவும், பிஎஸ்என்எல் வருமானத்தை இழந்து வருவதாகவும் குற்றம்சாட்டி போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.