வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 14 டிசம்பர் 2018 (16:35 IST)

100 கோடி டாலர் செலவு செய்யும் ஆப்பிள்: எதற்கு தெரியுமா?

உலகின் பெரிய தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் அமெரிக்க சந்தையில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறது. சமீபத்தில் ஒரு லட்ச கோடி கோடி டாலர் மதிப்பு பெற்ற முதல் நிறுவனமாக வளர்ந்தது. 
 
இந்நிலையில், அந்நிறுவனம் 100 கோடி டாலர்கள் செலவில் புது வளாகத்தை கட்டமைக்க இருக்கிறது. இந்த வளாகம் அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் அமைய இருக்கிறது. 
 
இதுதவிர சீட்டிள், சான் டீகோ மற்றும் கல்வர் சிட்டி உள்ளிட்ட இடங்களில் புதிய வளாகங்களை கட்டமைக்க இருப்பதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
இதன் மூலம் புது வேலைவாய்ப்புகளை உருவாக கூடும் என தெரிகிறது. இந்த ஆண்டு மட்டும் ஆப்பிள் நிறுவனம் 6000 வேலைவாய்ப்புகளை உருவாக்கி சுமார் 90,000 பேரை பணியமர்த்தி இருப்பது குறிப்பிடத்தக்கது. 
 
சமீபத்தில், சீனாவில் ஆப்பிள் ஐபோன்களுக்கு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.