செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 19 டிசம்பர் 2017 (18:54 IST)

ரூ.167 கோடி அபேஸ்: வாடிக்கையாளர்களை ஏமாளியாக்கிய ஏர்டெல் பேமெண்ட் வங்கி!!

ஏர்டெல் பேமெண்ட் நிறுவனம் வாடிக்கையாளகளின் அனுமதியின்றி ரூ.167 கோடியை வரவாக வைத்துள்ளது. இந்த தவறை ஏர்டெல் தரப்பு ஒப்புக்கொண்டுள்ளது. இந்தியாவின் முதல் பேமெண்ட் வங்கியாக ஏர்டெல் பேமெண்ட் வங்கி தொடங்கப்பட்டது. இந்நிலையில், இதனை பயன்படுத்த விரும்புபவர்கள் ஏர்டெல் பேமெண்ட் வங்கியுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். ஆனால், இது கட்டாயமானது அல்ல.
 
ஆனால், ஆதார் எண்ணை ஆவணமாக சமர்ப்பித்து ஏர்டெல் சிம் வாங்கிய 31.21 லட்சம் வாடிக்கையாளர்களின் அனுமதியின்றி  அவர்களது ஆதார் எண்ணை பயன்படுத்தி அவர்கள் பெயரில் பேமெண்ட் வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டுவிட்டது. ஏர்டெல் மற்றும் ஏர்டெல் பேமெண்ட் வங்கி நிறுவனங்கள் இரண்டும் ஆதார் மின்னணு சரிபார்ப்பு சேவையினை முறைகேடாக பயன்படுத்தி கோடிக் கணக்கில் பேமெண்ட் வங்கி கணக்குகளில் பணத்தை வரவாக வைத்துள்ளது என தெரியவந்தது.
 
இதனையடுத்து ஏர்டெல் நிறுவனத்திற்கு அதார் மின்னணு சரிபார்ப்பு சேவையில் இருந்து இடைக்கால தடை விதிப்பதாக தெரிவித்தது. இதற்கு பின்னணியில் நடந்த தில்லுமுல்லு தற்போது அம்பலமாகியுள்ளது. ஆதார் எண்ணை வைத்து பேமண்ட்ஸ் வங்கி சேவை துவங்கிதோடு நிறுத்தாமல், எல்பிஜி மானியம் பெறுவதற்கான தேர்வாகவும் ஏர்டெல் பெமெண்ட்ஸ் வங்கி கணக்கிற்கு மாற்றியுள்ளது. இவை அனைத்தும் வாடிக்கையாளரின் அனுமதியின்றி செய்யப்பட்டுள்ளது. 
 
இதனால், சர்ச்சை வெடித்ததும் ஏர்டெல் நிறுவனம், பேமெண்ட் வங்கியில் வரவு வைக்கப்பட்ட ரூ.167 கோடி பணத்தை அவர்களது வங்கிக்கணக்கிற்கு மாற்றப்படும் என தெரிவித்துள்ளது.