Daily Horoscope

ரெஸ்டாரண்ட் செல்லும் மக்கள் கவனத்திற்கு; அமலுக்கு வந்தது 5% ஜிஎஸ்டி!

Written By Abimukatheesh
Updated: புதன், 15 நவம்பர் 2017 (15:20 IST)
அண்மையில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ரெஸ்டாரண்டுகள் மீதான ஜிஎஸ்டி வரி 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.


 

 
கடந்த வாரம் நடைபெற்ற 23வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 177 பொருட்கள் மீதான 28% ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டது. தற்போது 50 பொருட்களுக்கு மட்டும் 28% வரி விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் கோரிக்கையின் அடிப்படையில் ரெஸ்டாரண்டுகள் மீதான ஜிஎஸ்டி வரியும் குறைக்கப்பட்டது.
 
18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் ரெஸ்டாரண்ட் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு சற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த 5% வரி இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. ஆனால் 5 ஸ்டார் ஹோட்டல்களுக்கு இந்த புதிய வரிவிதிப்பு பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ஜிஎஸ்டி கவுன்சில் முடிவுக்கு இந்திய ஹோட்டல் உரிமையாளர் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது. மேலும் ரெஸ்டாரண்ட் தொழிலுக்கு இனிமேல் இன்புட் டாக்ஸ் கிரெடிட் வசதி கிடையாது என்று தெரிவித்துள்ளார்.

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments