வெள்ளி, 15 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya
Last Modified: செவ்வாய், 16 ஆகஸ்ட் 2016 (14:23 IST)

ஐஐடி கேம்பஸ் இண்டர்வியூ: 20 ஸ்டார்ட்-அப் மற்றும் ஈகாமர்ஸ் நிறுவனங்களுக்கு தடை

ஐஐடி கேம்பஸ் இண்டர்வியூ: 20 ஸ்டார்ட்-அப் மற்றும் ஈகாமர்ஸ் நிறுவனங்களுக்கு தடை

நாட்டின் தலைசிறந்த கல்லூரிகளாகத் திகழும் ஐஐடி-யில் 2016ஆம் ஆண்டுக் கேம்பஸ் இண்டர்வியூவ்-இல் பங்குபெற சுமார் 20 ஸ்டார்ட்-அப் மற்றும் ஈகாமர்ஸ் நிறுவனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.


 


கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஐஐடி கல்லூரியின் வளாகத் தேர்வில் பல ஸ்டார்ட்-அப் மற்றும் ஈகாமர்ஸ் நிறுவனங்கள் பங்குபெற அதிகளவில் வாய்ப்புகள் அளிக்கப்பட்டது. ஆனால் ஸ்டார்ட்-அப் சந்தையில் ஏற்பட்டுள்ள மோசமான நிலையின் காரணமாக நிறுவனங்கள் உறுதியளித்த வேலைவாய்ப்பு, சம்பளத்தை அளிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டது.

இன்னும் சில நிறுவனங்கள் உறுதியளித்த வேலைவாய்ப்பையே மறுத்தது. இதனால் பல மாணவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டனர். இதன் எதிரொலியாகவே தற்போது ஐஐடி கல்லூரியின் வேலைவாய்ப்பு அமைப்பு 20 நிறுவனங்களுக்குத் தடை விதித்துள்ளது.

தற்போதைய நிலையில் தடை செய்யப்பட்ட பட்டியலில் 20 நிறுவனங்கள் இருக்கும் நிலையில் AIPC அமைப்பின் முக்கிய ஆலோசனை கூட்டத்திற்குப் பின் தடை செய்யப்பட்ட நிறுவனங்களின் முழுமையான பட்டியல் அடுத்த 2 வாரத்திற்குள் வெளியிடப்படும் என இவ்வமைப்பின் முக்கிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்