ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இந்தியா-ஈரான்: தொன்மையான நாகரீகங்களும் நவீன தேசங்களும் என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் உரையாற்றியுள்ள இந்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, இறையாண்மையுடன் கூடிய சுதந்திர நாட்டை ஏற்படுத்தவேண்டும் என்ற பாலஸ்தீன மக்களின் அபிலாசைகள் நிறைவேறுவதற்கு இந்தியா உறுதுணையாக இருக்கும் என்று கூறியுள்ளார்.இதுமட்டுமல்ல, பாலஸ்தீன மக்களின் உரிமைகள் இன்று வரை நிலைநிறுத்தப்படவில்லை என்கின்ற நிலை இந்தியாவிற்கு முக்கியமான கவலையாக உள்ளது. அது நிலைக்கு விரைவில் தீர்வு காணப்பட...