Daily Horoscope
✕

சிஎஸ்கேவை பின்னுக்கு தள்ளப்போவது யார்? – LSG vs GT அணிகள் இன்று மோதல்!

Written By Prasanth Karthick
Updated: ஞாயிறு, 7 ஏப்ரல் 2024 (12:05 IST)
நடப்பு ஐபிஎல் சீசனில் இன்று மாலை நேர போட்டியில் லக்னோ அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதிக் கொள்ள உள்ளன.



நடப்பு ஐபிஎல் சீசன் தொடங்கி பரபரப்பாக நடந்து வருகிறது. அனைத்து அணிகளும் தலா 4 போட்டிகள் வரை விளையாடியுள்ள நிலையில் புள்ளி பட்டியலில் அதிரடி மாற்றங்கள் தெரிகின்றன. இந்நிலையில் இன்று புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ள லக்னோ அணி, 7வது இடத்தில் உள்ள குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

இரு அணிகளுமே தலா 4 புள்ளிகளில் உள்ள நிலையில் இன்று வெற்றி பெறும் அணி மேலும் 2 புள்ளிகளை பெற்று சிஎஸ்கேவை கீழே இறக்கி புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தை அடைய வாய்ப்புகள் உள்ளது. அதுபோல அதிக ரன்ரேட் வித்தியாசத்தில் வெற்றி அமைந்தால் இரண்டாவது இடத்திற்கு கூட முன்னேற முடியும்.

ALSO READ: இன்றாவது வெற்றிக் கணக்கை தொடங்குமா மும்பை இந்தியன்ஸ்? – MI vs DC இன்று மோதல்!

குஜராத் அணி 4க்கு 2 போட்டி வெற்றி பெற்றிருந்தாலும், பேட்டிங் பவுலிங் லைன் அப் நல்ல நிலையில் உள்ளது. லக்னோ அணி 3க்கு 2 வெற்றியுடன் நல்ல ஃபார்மில் உள்ளது. இதனால் இந்த இரு அணிகளுக்கான இன்றைய போட்டி ஒரு சுவாரஸ்யமான போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எந்த அணி இறங்கினாலும் ரன் இலக்கு 160-180க்குள் இருக்கும் என்றும், சேஸிங் கடினமானதாக த்ரில்லானதாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Edit by Prasanth.K

எல்லாம் காட்டு

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடர்.. கேப்டனாக ஸ்மிருதி மந்தனாவின் முதல் வெற்றி..

ஐபிஎல் 2027 தொடர்... வீரர்கள் ஏலம் தேதி குறித்த தகவல்.. கோவாவில் நடைபெறுகிறதா?

வீதியில் இறங்கி போராடும் ராகுல் காந்தி.. ஆனால் தேர்தல் அரசியலுக்கு கை கொடுக்குமா?

மழையால் நின்று போன 5வது டி20 போட்டி போட்டி.. மே.இ.தீவு கேப்டனுக்கு தொடர் நாயகன் விருது..

சஞ்சு சாம்சனின் அதிரடி தொடக்கம் இருந்தபோதிலும் தோல்வி ஏன்? கவாஸ்கர் கடும் விமர்சனம்...

அடுத்த கட்டுரையில்
Show comments