1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 11 ஜூன் 2018 (18:57 IST)

வர்ணனையாளராக அவதாரம் எடுக்கும் டேவிட் வார்னர்!

கேப்டவுனில் நடந்த டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தடைபெற்ற டேவிட் வார்னர் வர்ணனையாளராக புதிய அவதாரம் எடுக்கவுள்ளார்.
 
தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 3 வது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் பேன்கிராப்ட் பீல்டிங் செய்த போது ஸ்மித்தின் உதவியுடன் பந்தை பொருள் ஒன்றால் சேதப்படுத்தி உள்ளார். ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீவன் சுமித்தும் இந்த விவகாரத்தை ஒப்புக் கொண்டார். இதனையடுத்து பந்தை வேண்டுமென்றே சேதப்படுத்தியதால் ஸ்மித்திற்கு சர்வதேச ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டியில் விளையாட தடையும், பான்கிராப்ட்டுக்கு 9 மாதம் விளையாட தடையும் விதித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டது.
 
சர்வதேச போட்டியில் இருந்து தடைவிதிக்கப்பட்ட வார்னருக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் உள்ளூர் போட்டிகளில் விளையாட அனுமதி அளித்தது. இதனையடுத்து, வார்னர் கனடாவில் வரும் ஜூன் 28ம் தேதி நடக்கவுள்ள ஒரு உள்ளூர் போட்டியில் கலந்து கொள்ளவுள்ளார்.

 
 
இதற்கிடையே இவர் ஆஸ்திரேயா- இங்கிலாந்து அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் 2வது போட்டியில் வர்ணையாளராக செயல்படவுள்ளார். இந்த போட்டி வரும் ஜூன் 16ம் தேதி கார்டிஃபில் நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.