Daily Horoscope
✕

பும்ராவுக்கு ஓய்வளிக்கக் கூடாது… அவர்தான் எல்லாமே- சுனில் கவாஸ்கர் கருத்து!

Written By vinoth
Updated: திங்கள், 9 டிசம்பர் 2024 (08:11 IST)
அடிலெய்டில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையில் களமிறங்கிய இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து 180 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து பேட்டிங் இறங்கிய ஆஸ்திரேலியா அணி 337 ரன்களை அடித்து குவித்தது. அந்த அண்யின் டிராவிஸ் ஹெட் அபாரமாக ஆடி சதமடித்தார்.

முதல் இன்னிங்ஸ் போலவே இரண்டாவது இன்னிங்ஸிலும் சொதப்பிய இந்திய அணி 175 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனதால் ஆஸ்திரேலியாவுக்கு இலக்கு வெறும் 19 ரன்கள்தான் என்று ஆனது. அதை ஆஸ்திரேலியா எளிதாக அடித்து வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில் தொடர்ச்சியாக விளையாடிவருவதால் பும்ராவுக்கு அடுத்த டெஸ்ட்டில் ஓய்வளிக்கப்பட வேண்டும் என குரல்கள் எழுந்துள்ளது குறித்து பேசியுள்ள சுனில் கவாஸ்கர் “என்னைப் பொறுத்தவரை பும்ரா ஐந்து போட்டிகளையும் விளையாட வேண்டும். இந்த டெஸ்ட் போட்டி இரண்டரை நாட்களில் முடிந்துவிட்டது. அதனால் அவருக்கு அதிக நாட்கள் ஓய்வெடுக்கக் கிடைத்துள்ளன. அவருக்குக் காயம் எதுவும் ஏற்படாத பட்சத்தில் தொடர்ந்து விளையாட வேண்டும். ஏனென்றால் அவர்தான் இந்திய பந்துவீச்சின் மையமாக இருக்கிறார்” எனக் கூறியுள்ளார்.

எல்லாம் காட்டு

அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் இஷான் கிஷான்.. இதற்கு முன் யார் யார்?

33 பந்துகளைச் சந்தித்து டக் அவுட்.. 10 வருடத்திற்கு பின் திரும்பிய வீரர் பரிதாப அவுட்..

பிரேமானந்த் ஆசிரமத்திற்கு ரூ.5 கோடியா? விராட் கோலி தரப்பு மறுப்பு!

ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி சதம்: வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!

மீண்டும் ஐபிஎல் தொடரில் களம் குதித்த கங்குலி.. இனி நான் பார்வையாளன் இல்லை என பதிவு...

அடுத்த கட்டுரையில்
Show comments