Daily Horoscope
✕

இது நீண்ட உறவின் தொடக்கம்… இளம் வீரர் குறித்து சென்னை அணிப் பயிற்சியாளர் கருத்து!

Written By vinoth
Updated: திங்கள், 5 மே 2025 (08:02 IST)
நடப்பு ஐபிஎல் தொடர் பரபரப்பாக நடந்து வரும் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பரிதாபகரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் அணியாக ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்தது. பாதியிலேயே தொடரில் இருந்து ருத்துராஜ் வெளியேறிய நிலையில் மீண்டும் கேப்டன் பொறுப்பேற்ற தோனியாவது அணியைக் கரைதேற்றுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவராலும் பெரியத் தாக்கத்தை செலுத்தி அணியை வெற்றிப் பாதைக்குக் கொண்டு செல்ல முடியவில்லை.

மொத்தம் 11 போட்டிகளில் விளையாடியுள்ள சி எஸ் கே இரண்டில் மட்டுமே வெற்றி பெற்று கடைசி இடத்தில் உள்ளது. ஆனால் இந்த முறை அணியின் சிறந்த கண்டுபிடிப்பாக ஆயுஷ் மாத்ரே கவனம் பெற்றுள்ளார். அணிக்குள் கடைசி நேரத்தில் மாற்று வீரராக வந்த அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

ஆயுஷ் மாத்ரே பற்றி பேசியுள்ள சென்னை அணித் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளமிங் “ஆயுஷ் மாத்ரே, நாங்கள் எதிர்பார்க்கும் நவீன டி 20 பேட்ஸ்மேனுக்கான அனைத்தையும் பெற்றுள்ளார். பெரிய லீக் தொடர்களில் தன்னை சிறப்பாக வெளிப்படுத்தும் தன்மை, எங்களைக் கவர்ந்துள்ளது.  இது ஒரு நீண்டகால உறவின் தொடக்கம் என நினைக்கிறேன்” எனக் கூறி, ஆயுஷ் மாத்ரே சி எஸ் கே அணியில் நீண்டகாலம் விளையாடவுள்ளார் என்பதைக் கூறியுள்ளார்.

எல்லாம் காட்டு

வைபவ் சூர்யவன்சி அணியில் இல்லையா? என் மனைவியே கேள்வி கேட்டார்: ஸ்ரீகாந்த் விமர்சனம்..

பாகிஸ்தான் அமைச்சர் கையால் கோப்பையை வாங்க மறுத்த இந்திய மகளிர் அணி.. ஆசிய கோப்பை மைதானத்தில் பரபரப்பு..

மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர்.. 8 முறையாக இந்திய அணி சாம்பியன்..

இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் மிஸ்ஸிங்.. இந்தியா - இலங்கை இறுதிப்போட்டியில் மோதல்..!

சிஎஸ்கே அணியின் 25% பங்குகளை கேட்டாரா எம்.எஸ்.தோனி? சிஎஸ்கேவின் மதிப்பு ரூ.17200 கோடி.. அப்ப 25% எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments