Daily Horoscope

இன்னைக்கு ஜெயிக்கலைனா சோலி முடிஞ்ச்..! – பேட்டிங் தேர்வு செய்த ஆர்சிபி!

Written By Prasanth Karthick
Updated: ஞாயிறு, 14 மே 2023 (15:27 IST)
ஐபிஎல் லீக் போட்டிகளின் பரபரப்பான இறுதி கட்டத்தில் இன்று நண்பகல் போட்டியில் ஆர்சிபி – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிக் கொள்கின்றன.

ஐபிஎல் தரவரிசையில் 16 புள்ளிகள் ப்ளே ஆப் தகுதி பெற தேவைப்படும் நிலையில் 12 புள்ளிகளுடன் ராஜஸ்தான் அணி 5வது இடத்திலும், ஆர்சிபி அணி 10 புள்ளிகளுடன் 7வது இடத்திலும் உள்ளது. இரு அணிகளுமே தங்களுக்கு மீதமுள்ள அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே ப்ளே ஆப் தகுதி பெற முடியும் என்ற நிலை உள்ளது.

இந்நிலையில் இன்று இரு அணிக்கும் நடைபெறும் போட்டி வாழ்வா? சாவா? போட்டியாக அமைகிறது. இதில் தோல்வியடையும் அணி ப்ளே ஆப் தகுதியை இழக்கும்.

தற்போது டாஸ் வென்ற ஆர்சிபி அணி பேட்டிங் தேர்ந்தெடுத்துள்ளது. வழக்கம்போல ஆர்சிபியின் KGF என வர்ணிக்கப்படும் கோலி, மேக்ஸ்வெல், டூ ப்ளெசிஸை நம்பியே ரன்கள் குவிப்பது உள்ளது. 200+ ரன்களை குவித்தால்தான் ராஜஸ்தான் போன்ற அணிகளை சேஸிங்கில் மடக்க முடியும்.

ராஜஸ்தான் அணியில் ஜெய்ஸ்வால், சஞ்சு, ஜாஸ் பட்லட், ஹெட்மயர், ஜுரெல் என பேட்டிங்கிற்கு பல நம்பிக்கை நட்சத்திரங்கள் உள்ளனர். யுவேந்திர சஹல் பந்து வீச்சில் கலக்கி வருகிறார். இந்த அணியை எதிர்கொள்வது ஆர்சிபிக்கு சவாலாகவே இருக்கும்.

Edit by Prasanth.K

எல்லாம் காட்டு

வைபவ் சூர்யவன்சி அணியில் இல்லையா? என் மனைவியே கேள்வி கேட்டார்: ஸ்ரீகாந்த் விமர்சனம்..

பாகிஸ்தான் அமைச்சர் கையால் கோப்பையை வாங்க மறுத்த இந்திய மகளிர் அணி.. ஆசிய கோப்பை மைதானத்தில் பரபரப்பு..

மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர்.. 8 முறையாக இந்திய அணி சாம்பியன்..

இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் மிஸ்ஸிங்.. இந்தியா - இலங்கை இறுதிப்போட்டியில் மோதல்..!

சிஎஸ்கே அணியின் 25% பங்குகளை கேட்டாரா எம்.எஸ்.தோனி? சிஎஸ்கேவின் மதிப்பு ரூ.17200 கோடி.. அப்ப 25% எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments