Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எப்போது ஓய்வு? – ஓப்பனாக அறிவித்த கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ!

Written By vinoth
Updated: புதன், 12 நவம்பர் 2025 (08:31 IST)
போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ உலகளவில் கவனம் பெற்ற விளையாட்டு வீரர்களில் ஒருவர்.  கால்பந்து உலகில் பல சாதனைகளைப் படைத்துள்ள ரொனால்டோ, அதற்கு வெளியேயும் பல சாதனைகளைப் படைத்துள்ளார். அதிகமாக சம்பாதிக்கும் கால்பந்துவீரர்களில் ஒருவரான ரொனால்டோ, உலகளவில் அதிக பாலோயர்கள் கொண்ட விளையாட்டு வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

கிளப் போட்டிகளில் கிட்டத்தட்ட அனைத்துக் கோப்பைகளையும் வென்றுவிட்டாலும், இன்னும் ரொனால்டோ கால்பந்து உலகக் கோப்பையை தனது அணிக்காக வெல்லவில்லை. தற்போது 38 வயதாகும் ரொனால்டோ சமீபத்தில் கால்பந்து போட்டிகளில் 900 கோல்கள் அடித்து புதிய சாதனையைப் படைத்தார். இன்னும் அவர் மகுடத்தில் சூடப்படாத ஒரே சிறகாக உலகக் கோப்பை மட்டுமே உள்ளது.

தற்போது 40 வயதாகும் ரொனால்டோ இன்னும் எத்தனை ஆண்டுகள் கால்பந்து விளையாடுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. தனது ஓய்வு பற்றிப் பேசியுள்ள ரொனால்டோ “கடந்த 25 ஆண்டுகளாக நான் கால்பந்துக்காக அனைத்தையும் கொடுத்துவிட்டேன். 2026 ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்குப் பின் ஓய்வு பெறுவேன். அனேகமாக இன்னும் ஒன்றிரண்டு ஆண்டுகள் மட்டுமே விளையாடுவேன்” எனக் கூறியுள்ளார்.

எல்லாம் காட்டு

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டிகள்.. இந்திய அணி அறிவிப்பு.. மீண்டும் வருகிறார் ஜடேஜா...

வைபவ் சூர்யவன்ஷி வரலாற்று சாதனை.. 16 வயதிற்குள் இதுவரை யாருமே செய்யாத சாதனை...!

இந்தியா - பிரேசில அணிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி.. விழாக்கோலம் ஆகும் கொல்கத்தா...

தோனி சாதனையை முறியடித்த ஸ்ரேயாஸ் அய்யர்.. அப்படி என்ன சாதனை செய்துவிட்டார்?

ஜிம்பாவேவுக்கு எதிரான முதல் டி20.. வைபவ் சூர்யவன்ஷி அதிரடியால் இந்தியா அபார வெற்றி...

அடுத்த கட்டுரையில்
Show comments