Daily Horoscope

பண்ட் முகத்தில் சிரிப்பு இல்லை… ஏதோ ஒன்று மிஸ் ஆகிறது- கில்கிறிஸ்ட் கருத்து!

Written By vinoth
Updated: செவ்வாய், 6 மே 2025 (09:35 IST)
கடந்த ஆண்டு இறுதியில் நடந்த ஐபிஎல் ஏலத்தில் ரிஷப் பண்ட் 27 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டு அனைவரையும் வாய்பிளக்கவைத்தார். இதுவரை நடந்த ஐபிஎல் ஏலத்தில் அதிக தொகைக்கு எடுக்கப்பட்ட வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.

லக்னோ அணிக்குக் கேப்டனாக நியமிக்கப்பட்ட அவர் அதன் பின்னர் செய்ததுதான் மகா சொதப்பல். இந்த ஆண்டு நடந்த போட்டிகளில் ஒரே ஒரு அரைசதம் தவிர்த்து மற்ற அனைத்துப் போட்டிகளிலும் சொதப்பி வருகிறார். இதன் காரணமாக லக்னோ அணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. அந்த அணி ப்ளே ஆஃப் செல்ல ஏதேனும் மாயாஜாலம் நடக்கவேண்டும் என்ற நிலை உள்ளது.

இந்நிலையில் பண்ட் பற்றி பேசியுள்ள ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட் “ரிஷப் பண்ட் எப்போதும் கவலையில்லாமல் சிரித்து மகிழ்ச்சியாகக் கிரிக்கெட் விளையாடக் கூடியவர்.  ஆனால் இந்த சீசனில் அவர் முகத்தில் சிரிப்பைப் பார்க்க முடியவில்லை. அது கேப்டன் பொறுப்பாலோ அல்லது அதிக சம்பளம் கொடுத்து வாங்கப்பட்டதாலோ வந்த அழுத்தமாக இருக்கலாம். இந்த சீசனில் அவரிடம் ஏதோ ஒன்று மிஸ் ஆகிறது” எனக் கூறியுள்ளார்.

எல்லாம் காட்டு

வைபவ் சூர்யவன்சி அணியில் இல்லையா? என் மனைவியே கேள்வி கேட்டார்: ஸ்ரீகாந்த் விமர்சனம்..

பாகிஸ்தான் அமைச்சர் கையால் கோப்பையை வாங்க மறுத்த இந்திய மகளிர் அணி.. ஆசிய கோப்பை மைதானத்தில் பரபரப்பு..

மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர்.. 8 முறையாக இந்திய அணி சாம்பியன்..

இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் மிஸ்ஸிங்.. இந்தியா - இலங்கை இறுதிப்போட்டியில் மோதல்..!

சிஎஸ்கே அணியின் 25% பங்குகளை கேட்டாரா எம்.எஸ்.தோனி? சிஎஸ்கேவின் மதிப்பு ரூ.17200 கோடி.. அப்ப 25% எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments