Daily Horoscope

ரிஷப் பண்ட் சி எஸ் கே அணிக்கு ஆடினாலும் ஆச்சர்யப்பட வேண்டாம்… முன்னாள் வீரர் பற்ற வைத்த நெருப்பு!

Written By vinoth
Updated: திங்கள், 4 டிசம்பர் 2023 (07:46 IST)
இந்த ஆண்டு தொடக்கத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப் பண்ட் கார் விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் படுகாயமடைந்த ரிஷப் பண்ட் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தசைநார் கிழிவுக்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து இப்போது காயத்தில் இருந்து குணமாகி வரும் அவர் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் களமிறங்குவார் என சொல்லப்படுகிறது.

தற்போது டெல்லி அணிக்காக விளையாடி வரும் பண்ட், அந்த அணிக்கு கேப்டனாகவும் செயல்படுகிறார். இந்நிலையில் முன்னாள் வீரரான தீப்தாஸ் குப்தா ரிஷப் பண்ட் 2025 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடுவார் என கூறியுள்ளார்.

இதுபற்றி பேசியுள்ள அவர் “தோனி ரிஷப் பண்ட்டை சென்னை அணிக்கு அழைத்து வந்தாலும் வருவார். இருவரும் மிகவும் நெருக்கமாக இருக்கிறார்கள். ரிஷப் பண்ட் தோனியை மிகவும் நேசிக்கிறார்கள். இருவர்களது சிந்தனையும் ஒத்திருக்கிறது” எனக் கூறியுள்ளார். தோனி 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரோடு ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு சி எஸ் கே அணியை யார் வழிநடத்துவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

எல்லாம் காட்டு

வைபவ் சூர்யவன்சி அணியில் இல்லையா? என் மனைவியே கேள்வி கேட்டார்: ஸ்ரீகாந்த் விமர்சனம்..

பாகிஸ்தான் அமைச்சர் கையால் கோப்பையை வாங்க மறுத்த இந்திய மகளிர் அணி.. ஆசிய கோப்பை மைதானத்தில் பரபரப்பு..

மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர்.. 8 முறையாக இந்திய அணி சாம்பியன்..

இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் மிஸ்ஸிங்.. இந்தியா - இலங்கை இறுதிப்போட்டியில் மோதல்..!

சிஎஸ்கே அணியின் 25% பங்குகளை கேட்டாரா எம்.எஸ்.தோனி? சிஎஸ்கேவின் மதிப்பு ரூ.17200 கோடி.. அப்ப 25% எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments