Daily Horoscope
✕

ஐபிஎல் கோப்பையுடன் இன்று பெங்களூருவில் வீதியுலா செல்லும் RCB அணி!

Written By vinoth
Updated: புதன், 4 ஜூன் 2025 (08:48 IST)
நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது ஆர் சி பி அணி. அந்த அணிக்காகத் தொடர்ந்து 18 ஆண்டுகள் விளையாடிய கோலி முதல் முறையாகக் கோப்பையைக் கையில் ஏந்தியுள்ளார். இது அவரது கோடிக் கணக்கான ரசிகர்களை மகிழ்ச்சியில் குதூகலிக்க வைத்துள்ளது.

இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் பட்டம் வெல்லவில்லை என்றாலும் ஐபிஎல் அணிகளிலேயே அதிக ரசிகர்களைக் கொண்ட ஒரு அணியாக ஆர் சி பி அணி உள்ளது. அந்த அளவுக்கு கர்நாடகா தாண்டியும் அந்த அணிக்கு பரவலான ரசிகர் பட்டாளம் உள்ளது.

இந்நிலையில் இன்று ஐபிஎல் கோப்பையுடன் பெங்களூருவில் அந்த  அணி வீதியுலா செல்லவுள்ளது. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு விதானா சவுதா சாலையில் தொடங்கும் வீதியுலா சின்னசாமி மைதானத்தில் நிறைவடையவுள்ளது.

எல்லாம் காட்டு

33 பந்துகளைச் சந்தித்து டக் அவுட்.. 10 வருடத்திற்கு பின் திரும்பிய வீரர் பரிதாப அவுட்..

பிரேமானந்த் ஆசிரமத்திற்கு ரூ.5 கோடியா? விராட் கோலி தரப்பு மறுப்பு!

ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி சதம்: வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!

மீண்டும் ஐபிஎல் தொடரில் களம் குதித்த கங்குலி.. இனி நான் பார்வையாளன் இல்லை என பதிவு...

வாஷிங்டன் சுந்தருக்கு தமிழக அரசு ரூ.75 லட்சம் பரிசுத்தொகை.. முதல்வர் விஜய் அறிவிப்பு..

அடுத்த கட்டுரையில்
Show comments