Daily Horoscope
✕

நியுசிலாந்து விக்கெட் கீப்பரை மாற்று வீரராக ஒப்பந்தம் செய்த RCB..!

Written By vinoth
Updated: வியாழன், 22 மே 2025 (13:54 IST)
கடந்த பல சீசன்களாக தொடர்ந்து சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பெங்களூர் அணி, இந்த சீசனில் சிறப்பாக விளையாடி வருகிறது. இதுவரையிலான 11 போட்டிகளில் 8 போட்டிகளை வென்று புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இம்முறை அந்த அணியின் வெற்றிக்குக் காரணமாக பார்க்கப்படுவது அனைத்து வீரர்களும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக அளிப்பதுதான். கோலியை மட்டுமே நம்பி இருக்காமல் இளம் வீரர்கள் பலரும் தங்கள் ஆட்டத்தை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளனர்.

அதனால் இந்த முறை அந்த அணிக் கோப்பையை வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் என யூகிக்கப்படும் நிலையில், தற்போது அந்த அணிக்கு அடுத்தடுத்துப் பெரும் பின்னடைவுகள் ஏற்படத் தொடங்கியுள்ளன.  ஒரு வார ஒத்திவைப்பதற்குப் பிறகு தற்போது ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில் ஆர் சி பி அணி கொல்கத்தாவுடன் விளையாட இருந்த போட்டி மழைக் காரணமாக கைவிடப்பட்டது. இந்நிலையில் ஆர் சி பி அணி 17 புள்ளிகளோடு ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்றுள்ளது.

இந்நிலையில் ஆர் சி பி அணியில் இடம்பெற்றுள்ள ஜேக்கப் பீத்தல் சர்வதேச தொடருக்காக இங்கிலாந்து திரும்பியுள்ள நிலையில் அவருக்குப் பதிலாக நியுசிலாந்து அணியின் டிம் செய்ஃபர்ட்டைத் தற்காலிக வீரராக ஆர் சி பி நிர்வாகம் வாங்கியுள்ளது.

எல்லாம் காட்டு

சானியா மிர்சா சாதனையை முறியடித்த கோவை 17 வயது இளம் பெண்.. டென்னிஸ் உலகில் ஒரு மகுடம்...

4வது டி20 போட்டியில் இந்தியா தோல்வி.. மே.இ.தீவின் கேப்டன் ஷாய் ஹோப் அபாரம்...

மீண்டும் சன்ரைசர்ஸ் அணிக்கு திரும்பிய நடராஜன்.. ஆனால் பாதி விலைக்கு தான்...

கால்பந்து போட்டி போல் கிரிக்கெட்டில் தரம் பிரிக்க வேண்டும்: கவாஸ்கர் யோசனை...

ஜோஸ் பட்லருக்கு தொடையில் அறுவை சிகிச்சை.. 2027 உலகக் கோப்பைத் தொடரில் விளையாடுவாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments