Daily Horoscope

மழையால் பாதிக்கப்பட்ட பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டி!

Written By vinoth
Updated: சனி, 14 டிசம்பர் 2024 (10:42 IST)
இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் ட்ராபி டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் இரு அணிகளும் தலா ஒரு போட்டிகளை வென்று 1-1 என்ற கணக்குடன் சமனில் உள்ளன.

இதையடுத்து மூன்றாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் கப்பா மைதானத்தில் தொடங்கியுள்ளது. இரு அணிகளிலுமே மாற்றம் நடந்துள்ளது. இந்திய அணியில் அஸ்வின் மற்றும் ஹர்ஷித் ராணா நீக்கப்பட்டு அவர்களுக்குப் பதில் ஜடேஜா மற்றும் ஆகாஷ் தீப் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆஸி அணியில் ஸ்காட் போலண்ட் நீக்கப்பட்டு அவருக்குப் பதில் ஜோஷ் ஹேசில்வுட் மீண்டும் அணிக்குள் திரும்பியுள்ளார்.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணிக் கேப்டன் ரோஹித் ஷர்மா முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளார். அதன்படி பேட் செய்த ஆஸி அணி விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் சேர்த்தபோது மழைக் குறுக்கிட்டதால் சீக்கிரமாகவே உணவு இடைவேளை அறிவிக்கப்பட்டது. ஆனால் அதன் பின்னரும் தொடர்ந்து மழைப் பெய்வதால் தற்போது ஆட்டம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
 

எல்லாம் காட்டு

வைபவ் சூர்யவன்சி அணியில் இல்லையா? என் மனைவியே கேள்வி கேட்டார்: ஸ்ரீகாந்த் விமர்சனம்..

பாகிஸ்தான் அமைச்சர் கையால் கோப்பையை வாங்க மறுத்த இந்திய மகளிர் அணி.. ஆசிய கோப்பை மைதானத்தில் பரபரப்பு..

மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர்.. 8 முறையாக இந்திய அணி சாம்பியன்..

இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் மிஸ்ஸிங்.. இந்தியா - இலங்கை இறுதிப்போட்டியில் மோதல்..!

சிஎஸ்கே அணியின் 25% பங்குகளை கேட்டாரா எம்.எஸ்.தோனி? சிஎஸ்கேவின் மதிப்பு ரூ.17200 கோடி.. அப்ப 25% எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments