1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: திங்கள், 30 டிசம்பர் 2024 (11:21 IST)

90 ஆண்டுகளுக்குப் பிறகு… சாதனையைப் படைத்த இந்தியா vs ஆஸ்திரேலியா பாக்ஸிங் டே டெஸ்ட்!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்காவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி இன்று மெல்போர்னில் தற்போது நடந்து வருகிறது. இதில் ஐந்தாம் நாளில் இந்திய அணி தோல்வியைத் தவிர்க்க போராடி வருகிறது.

இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 474 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் ஆடிய இந்திய அணி 369 ரன்கள் சேர்த்தது. இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 234 ரன்களுக்கு ஆட்டமிழக்க இந்திய அணி 340 ரன்கள் என்ற இலக்கோடு ஆடிவருகிறது. தற்போது வரை 7 விக்கெட்களை இழந்துள்ளதால் இந்திய அணி தோல்வியின் விளிம்பில் உள்ளது.

இந்நிலையில் இந்த பாக்ஸிங் டெ டெஸ்ட் போட்டியைக் காண மொத்தமாக 5 நாட்களில் 3.51 லட்சம் பார்வையாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். 1937 ஆம் ஆண்டு ஆஷஸ் தொடருக்குப் பிறகு மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் அதிகம் பேர் பார்த்து ரசித்த போட்டியாக இந்த பாக்ஸிங் டே டெஸ்ட் அமைந்துள்ளது.