30 வயதானேலே 80 வயது ஆகிவிட்டதாக நினைக்கிறார்கள்… முரளி விஜய் ஆதங்கம்!
இந்திய கிரிக்கெட் வீரர் முரளி விஜய் வெளிநாட்டு தொடர்களில் விளையாட விருப்பப் படுவதாக அறிவித்துள்ளார்.
இந்திய அணிக்காக டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் சிலவற்றில் விளையாடியவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த முரள் விஜய். ஐபிஎல் தொடரில் சி எஸ் கே அணிக்காகவும், மற்ற பிற அணிகளுக்காவும் விளையாடியுள்ள அவருக்கு இப்போது வாய்ப்புகள் இல்லை.
இந்நிலையில் இதுபற்றி பேசியுள்ள அவர் ”நான் வெளிநாட்டில் நடக்கும் தொடர்களில் விளையாட ஆசைப்படுகிறேன். இங்கே 30 வயது ஆகிவிட்டாலே 80 வயது ஆகிவிட்டதாக நினைக்கிறார்கள். என்னால் இன்னும் கொஞ்சம் காலம் சிறப்பாக விளையாட முடியும். ஆனால் எனக்கு அதற்கான வாய்ப்புகளே இல்லை” எனக் கூறி ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.