Daily Horoscope
✕

திடீரென ஓய்வை அறிவித்த ஆஸ்திரேலிய அணி வீரர்!

Written By vinoth
Updated: வியாழன், 6 பிப்ரவரி 2025 (13:12 IST)
ஆஸ்திரேலிய அணியின் வலுவான அதிரடி ஆட்டக்காரர்களில் ஒருவர் மார்கஸ் ஸ்டாய்னிஸ். இவர் கடந்த சில ஆண்டுகளாக ஆஸ்திரேலிய அணிக்காக லிமிடெட் ஓவர் போட்டிகளில் விளையாடி வருகிறார். கடந்த ஆண்டு உலகக் கோப்பையை வென்ற ஆஸி அணியிலும் இடம்பெற்றிருந்தார்.

இந்நிலையில் இப்போது சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு முன்பாக அவர் ஒருநாள் போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அவர் சாம்பியன்ஸ் கோப்பைக்கான அணியில் இடம்பெற்றிருந்தார். அதனால் அந்த தொடரில் விளையாடுவாரா அல்லது அவருக்குப் பதில் மாற்றுவீரர் அறிவிக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தற்போதைய காலகட்டத்தில்  வீரர்கள் டி 20 போட்டிகள் விளையாடவே அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அதற்கேற்றார் போல உலகமெங்கும் லீக் போட்டிகளும் அதிகளவில் நடந்து வருகின்றன.

எல்லாம் காட்டு

இந்திய பவுலர்களுக்கு விக்கெட் விழவே இல்லை.. போராடி டிரா செய்த நியூசிலாந்து..

இந்தியா வெற்றிக்கு இன்னும் 5 விக்கெட்டுக்கள் தேவை.. இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க நியூசிலாந்து போராட்டம்...

720 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்த இந்தியா... கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட் அபார சதங்கள்...

39 பந்துகளில் சதம் அடித்து உலக சாதனை.. 8 பவுண்டரிகள், 9 சிக்ஸர்கள் விளாசிய ஹெட்மயர்...

நியூசிலாந்தை காப்பாற்றிய 2 வீரர்களின் அதிரடி சதம்... இந்தியா பதிலடி கொடுக்குமா?

அடுத்த கட்டுரையில்
Show comments