Daily Horoscope
✕

இலங்கையை சூப்பர் ஓவரில் வீழ்த்தி இந்தியா வெற்றி…!

Written By vinoth
Updated: சனி, 27 செப்டம்பர் 2025 (08:41 IST)
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டியில் இலங்கை அணி மிகச்சிறப்பாக விளையாடி நூலிழையில் வெற்றியைத் தவறவிட்டது. இந்த போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 5 விக்கெட்களை இழந்து 202 ரன்கள் சேர்த்தது. இந்திய அணி சார்பில் அபிஷேக் ஷர்மா 61 ரன்களும்,  திலக் வர்மா 49 ரன்களும் சேர்த்தனர்.

இதையடுத்து ஆடிய இலங்கை அணியும் இந்திய அணிக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக பேட் செய்தது.  அந்த அணியின் பதும் நிசாங்கா சிறப்பாக விளையாடி சதமடித்தார். அவருக்குத் துணையாக குஷால் பெராரா 58 ரன்கள் சேர்த்தார். ஆனால் பரபரப்பான கடைசி ஓவரில் போட்டி சமனில் முடிந்தது.

இதையடுத்து சூப்பர் ஓவர் வீசப்பட்ட நிலையில் அதில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 2 ரன்கள் மட்டும் எடுத்து  2 விக்கெட்களை இழந்தது. பின்னர் இந்திய அணி முதல் பந்திலேயே 3 ரன்கள் சேர்த்து இலக்கை எட்டி வெற்றி பெற்றது. சதம் அடித்த பதும் நிசாங்கா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

எல்லாம் காட்டு

வைபவ் சூர்யவன்சி அணியில் இல்லையா? என் மனைவியே கேள்வி கேட்டார்: ஸ்ரீகாந்த் விமர்சனம்..

பாகிஸ்தான் அமைச்சர் கையால் கோப்பையை வாங்க மறுத்த இந்திய மகளிர் அணி.. ஆசிய கோப்பை மைதானத்தில் பரபரப்பு..

மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர்.. 8 முறையாக இந்திய அணி சாம்பியன்..

இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் மிஸ்ஸிங்.. இந்தியா - இலங்கை இறுதிப்போட்டியில் மோதல்..!

சிஎஸ்கே அணியின் 25% பங்குகளை கேட்டாரா எம்.எஸ்.தோனி? சிஎஸ்கேவின் மதிப்பு ரூ.17200 கோடி.. அப்ப 25% எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments