Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கையை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி

Written By Abimukatheesh
Updated: சனி, 29 ஜூலை 2017 (17:06 IST)
இலங்கையில் நடைப்பெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 304 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிப்பெற்றது.


 

 
இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. தற்போது 3 டெஸ்ட் போட்டிகள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் காலே மைதானத்தில் நடைப்பெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 600 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.
 
இதைத்தொடர்ந்து விளையாடிய இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 291 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இலங்கை அணிக்கு பாலோ ஆன் விழுந்தாலும் இந்தியா அணி தொடர்ந்து தனது 2வது இன்னிங்ஸை தொடங்கியது. 4வது நாளான இன்று இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. 
 
இதையடுத்து 550 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 245 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. இதனால் இந்திய அணி 304 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்றது.
 
முதல் இன்னிங்ஸில் தொடக்க ஆட்டக்காரர் தவான் மற்றும் புஜாரா சதம் அடித்தனர். இரண்டாவது இன்னிங்ஸில் கேப்டன் கோலி சதம் விளாசினார். ஜடேஜா முதல் டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட் எடுத்துள்ளார். இலங்கை அணியில் பெரிரா இரண்டு இன்னிங்ஸிலும் இறுதிவரை அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார். முதல் இன்னிங்ஸில் 92 ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் இருந்தார்.

எல்லாம் காட்டு

இந்தியாவின் வெற்றியை தடுத்த இலங்கை பேட்ஸ்மேனின் சதம்.. டிராவை நோக்கி செல்கிறதா?

இன்னிங்ஸ் வெற்றியை நோக்கி இந்தியா.. ஃபாலோ ஆன் ஆகி 2வது இன்னிங்ஸில்ம் விக்கெட்டுக்களை இழந்து வரும் இலங்கை...

ஃபாலோ ஆன் ஆகிடுமா இலங்கை.. இந்திய பந்து வீச்சாளர்கள் அபாரம்.. 2 பேட்ஸ்மேன்கள் சதம்...

கொழும்பு டெஸ்ட் போட்டியில் முக்கிய சாதனை செய்த சுப்மன் கில்.. குவியும் வாழ்த்துக்கள்..

டெஸ்ட் போட்டிக்கு தேற மாட்டாரா வைபவ் சூர்யன்வன்ஷி.. 6 பந்துகளில் 8 ரன்கள் எடுத்து அவுட்..

அடுத்த கட்டுரையில்
Show comments