வெள்ளி, 1 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Annakannan
Last Updated : புதன், 6 ஆகஸ்ட் 2014 (14:44 IST)

இந்திய கிரிக்கெட் அணியிலிருந்து யுவராஜ் சிங், அமீத் மிஸ்ரா நீக்கம்

இங்கிலாந்தில் அந்நாட்டு அணிக்கு எதிராக நடைபெற உள்ள ஐந்து ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளிலும் ஒரு 20 ஓவர் கிரிக்கெட் போட்டியிலும் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
 
17 பேர் கொண்ட இந்திய அணியிலிருந்து யுவராஜ் சிங்கும் அமீத் மிஸ்ராவும் நீக்கப்பட்டுள்ளனர். 
 
கேரள மாநிலத்தைச் சேர்ந்த விக்கெட் கீப்பரும் பேட்ஸ்மேனுமான சஞ்சய் சாம்சனும் ரயில்வேயைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் கரண் சர்மாவும் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.
 
இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையேயான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி, ஆகஸ்ட் 25ஆம் தேதி, பிரிஸ்டலில் நடைபெற உள்ளது.
 
இதனிடையே, இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி, நாளை (ஆகஸ்ட் 7), மான்செஸ்டரில் தொடங்குகிறது.