1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : திங்கள், 5 ஜூன் 2017 (15:30 IST)

இந்திய கிரிக்கெட் வீரர்களின் பஸ்சை முற்றுகையிட்ட பாகிஸ்தான் கும்பல்

நேற்று நடைப்பெற்ற போட்டியில் விளையாடிய இந்திய கிரிக்கெட் அணி ஸ்டேடியத்திற்கு வந்தபோது, அவர்கள் வந்த பஸ்சை பாகிஸ்தானை சேர்ந்த ஒரு கும்பல் முற்றுகையிட்டு கோஷமிட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


 

 
இங்கிலாந்தில் நடைப்பெற்று வரும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் நேற்று பாகிஸ்தான், இந்தியா ஆகிய ஆணிகள் மோதின. இரண்டு வருடத்திற்கு பிறகு இரண்டு அணிகளும் விளையாடுவதால் மைதானத்தில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.
 
போட்டி தொடங்குவதற்கு முன் இந்திய அணி வீரர்கள் ஸ்டேடியத்திற்கு வந்தபோது, அவர்களை வந்த பஸ்சை பாகிஸ்தானை சேர்ந்த ஒரு கும்பல சூழ்ந்துக்கொண்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அந்த கும்பல் காஷ்மீருக்கு விடுதலை கொடு, இந்தியாவே வெளியேறு என கோஷமிட்டனர். 
 
பின்னர் அங்கிருந்து சென்றுவிட்டனர். அதே இடத்தில் இந்திய ரசிகர்களும் ஏராளமானோர் இருந்தனர். அவர்கள் கோலி... கோலி.... என கோஷமிட தொடங்கினர். இதையடுத்து நிலைமை இயல்பு நிலைக்கு மாறியது.
 
இதனால் இங்கிலாந்தில் இந்திய வீரர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது என பலரும் தெரிவித்து வருகின்றனர்.