Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முக்கியமான போட்டிகளில் 10 வீரர்களோடு விளையாடுவது பின்னடைவு!… ஐசிசிக்குக் கம்பீர் வேண்டுகோள்!

Written By vinoth
Updated: திங்கள், 28 ஜூலை 2025 (14:24 IST)
மான்செஸ்டரின் ஓல்ட் ட்ரஃபோர்ட் மைதானத்தில் நடந்து முடிந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் மிகச்சிறப்பான தடுப்பாட்டத்தை ஆடி போட்டியை டிரா செய்தனர். இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் துணைக் கேப்டனும் விக்கெட் கீப்பருமான ரிஷப் பண்ட்  கிறிஸ் வோக்ஸ் வீசிய யார்க்கர் பந்தைக் காலில் வாங்கினார். இதன் காரணமாக அவருக்கு காலில் சிறு எலும்பு முறிவு ஏற்பட்டு ரிட்டையர்ட் ஹர்ட் ஆனார். அதன் பின்னர் அவர் மருத்துவர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டார்.

அந்த காயத்தினுடனேயே அவர் அந்த இன்னிங்ஸில் மீண்டும் களமிறங்கி ஆடினார். ஆனால் அதன் பிறகு அவர் விக்கெட் கீப்பிங் செய்யவில்லை. இதையடுத்து அவர் அடுத்து நடக்கவுள்ள ஐந்தாவது போட்டியில் இருந்து வெளியேறியுள்ளார். அவருக்குப் பதில் மாற்று வீரராக தமிழகத்தைச் சேர்ந்த ஜெகதீசன் நாராயணன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இது குறித்து பேசியுள்ள இந்திய அணியின் பயிற்சியாளர் கம்பீர் “டெஸ்ட் போட்டிகளுக்கு நடுவே இதுபோன்ற புறக் காரணிகளால் காயமடைந்து வெளியேறும் வீரர்களுக்குப் பதிலாக மாற்று வீரராக சேர்க்கப்படும் வீரரை பிளேயிங் லெவனில் இடம்பெற செய்யும் படி திருத்தம் கொண்டுவரவேண்டும். முக்கியமான போட்டியில் 11 பேர் கொண்ட அணிக்கெதிராக 10 வீரர்களோடு விளையாடுவது பின்னடைவை ஏற்படுத்தும்” எனக் கூறியுள்ளார். 

எல்லாம் காட்டு

2027 ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவாரா? இம்பாக்ட் பிளேயராக மட்டும் களமிறங்குவாரா?

அஜித் அகர்கர் பதவிக்காலம் முடிகிறது.. பதவி நீட்டிப்பா? வேறொருவர் நியமனமா?

இந்திய - ஆப்கானிஸ்தான் டி20 தொடரில் ஹர்திக் பாண்டியா இல்லையா? என்ன காரணம்?

இம்ரான்கான் குறித்து வீரர்கள் கருத்து தெரிவிக்க கூடாது: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்...

கேப்டனுக்கு ஏற்பட்ட திடீர் காயம்.. வைபவ் சூர்யவன்ஷி புதிய கேப்டன் என அறிவிப்பு...

அடுத்த கட்டுரையில்
Show comments