Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொட்டித் தீர்த்த் மழை… மழை காரணமாக கைவிடப்பட்ட முதல் நாள் ஆட்டம்…!

Written By vinoth
Updated: சனி, 14 டிசம்பர் 2024 (14:42 IST)
இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் ட்ராபி டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் இரு அணிகளும் தலா ஒரு போட்டிகளை வென்று 1-1 என்ற கணக்குடன் சமனில் உள்ளன.

இதையடுத்து மூன்றாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் கப்பா மைதானத்தில் தொடங்கியுள்ளது. இரு அணிகளிலுமே மாற்றம் நடந்துள்ளது. இந்திய அணியில் அஸ்வின் மற்றும் ஹர்ஷித் ராணா நீக்கப்பட்டு அவர்களுக்குப் பதில் ஜடேஜா மற்றும் ஆகாஷ் தீப் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆஸி அணியில் ஸ்காட் போலண்ட் நீக்கப்பட்டு அவருக்குப் பதில் ஜோஷ் ஹேசில்வுட் மீண்டும் அணிக்குள் திரும்பியுள்ளார்.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணிக் கேப்டன் ரோஹித் ஷர்மா முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளார். அதன்படி பேட் செய்த ஆஸி அணி விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் சேர்த்தபோது மழைக் குறுக்கிட்டதால் சீக்கிரமாகவே உணவு இடைவேளை அறிவிக்கப்பட்டது. ஆனால் அதன் பின்னரும் தொடர்ந்து மழைப் பெய்வதால் முதல் நாள் ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

எல்லாம் காட்டு

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டிகள்.. இந்திய அணி அறிவிப்பு.. மீண்டும் வருகிறார் ஜடேஜா...

வைபவ் சூர்யவன்ஷி வரலாற்று சாதனை.. 16 வயதிற்குள் இதுவரை யாருமே செய்யாத சாதனை...!

இந்தியா - பிரேசில அணிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி.. விழாக்கோலம் ஆகும் கொல்கத்தா...

தோனி சாதனையை முறியடித்த ஸ்ரேயாஸ் அய்யர்.. அப்படி என்ன சாதனை செய்துவிட்டார்?

ஜிம்பாவேவுக்கு எதிரான முதல் டி20.. வைபவ் சூர்யவன்ஷி அதிரடியால் இந்தியா அபார வெற்றி...

அடுத்த கட்டுரையில்
Show comments