வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : திங்கள், 22 மே 2017 (17:22 IST)

என்னதான் மும்பை ஜெயித்தாலும் மவுசு தல தோனிக்குதான்

நேற்று நடைப்பெற்ற ஐபிஎல் இறுதிப் போட்டியில் புனே அணியை வீழ்த்தி மும்பை அணி வெற்றுப்பெற்றது. இதையடுத்து சமூக வலைதளங்களில் தல தோனி குறித்த செய்திகள் வைரலாக பரவ தொடங்கியது.


 

 
ஐபிஎல் 2017 தொடரில் மும்பை அணி புனே அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது. இருந்தும் மும்பை அணி குறித்து பெரிதாக யாரும் பேசவில்லை. வாழ்த்துக்களுடன் நிறுத்திக்கொண்டனர். இதைத்தொடர்ந்து அடுத்து சென்னை சூப்பர் அணி அடுத்த ஐபில் தொடரில் விளையாட உள்ளது. இதுகுறித்து சமூக வலைதளங்களில் பேச தொடங்கினர்.
 
தல தோனி தலைமையில் மீண்டும் சென்னை அணி ரீ எண்டரி கொடுக்க உள்ளது. இதுதான் ட்விட்டரில் டாப் ட்ரண்டிங்கில் இருந்தது. மும்பை அணி கோப்பையை வென்றாலும், தல தோனிதான் ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டார்.