புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: வியாழன், 24 அக்டோபர் 2019 (10:39 IST)

உறுதியானது வங்கதேசமுடனான டி 20 தொடர்..

வங்கதேச கிரிக்கெட் அணியின் கோரிக்கைகள் கிரிக்கெட் வாரியம் ஏற்றுக்கொண்டதையடுத்து கிரிக்கெட் வீரர்கள் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றனர்.

50 சதவீத ஊதிய உயர்வு, அதிகரிக்கப்பட்ட பயணப்படி, வங்கதேச கிரிக்கெட் லீக்கை வர்த்தக முறையில் மாற்ற வேண்டும் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, வங்கதேச கிரிக்கெட் டி20 அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன், டெஸ்ட் அணி கேப்டன் மஹ்முத்துல்லா உஇபட 50 வீரர்கள் சமீபத்தில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் வருகிற நவம்பர் மாதம் 3 ஆம் தேதி இந்திய அணிகளுடன் வங்கதேசம் மோதும் டி20 தொடர் நடைபெறுமா என சந்தேகம் எழுந்தது. இதனிடையே கிரிக்கெட் வீரர்கள் முன் வைத்து கோரிக்கைகள் குறித்து வீரர்களுடன் அந்நாட்டின் கிரிக்கெட் வாரியம் பேச்சுவார்த்தை நடத்தியது.

இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் கிரிக்கெட் வீரர்களின் 11 அம்ச கோரிகைகள் நிறைவேற்றப்பட்டன. இந்நிலையில் தற்போது இந்தியா_வங்கதேச அணிகளுக்கிடையேயான டி20 தொடர் தற்போது உறுதியாகியுள்ளது.