புதன், 18 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 18 டிசம்பர் 2024 (09:47 IST)

சீட்டுக்கட்டு போல சரிந்த ஆஸ்திரேலிய விக்கெட்கள்… அப்ப நம்ம நிலைமை?

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 445 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் டிராவிஸ் ஹெட் மற்றும் ஸ்டீவன் ஸ்மித் ஆகியோர் சிறப்பாக ஆடி சதமடித்தனர்.

அதன் பின்னர் இந்திய அணியில் கே எல் ராகுல் மற்றும் ஜடேஜா ஆகியோர் தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொதப்ப கடைசி நேரத்தில் இந்திய அணி பவுலர்களின் போராட்ட பேட்டிங் இன்னின்ஸால் ஃபாலோ ஆனை தவிர்த்து உள்ளது. பத்தாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த பும்ரா மற்றும் ஆகாஷ் தீப் அருமையாக விளையாடி இந்திய அணி பாலோ ஆனைத் தவிர்க்க காரணமாக அமைந்தனர். இந்திய அணி 260 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இதையடுத்து 185 ரன்களோடு இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸி அணி மளமளவென விக்கெட்களை இழந்து தடுமாறிவருகிறது. தற்போது வரை 7 விக்கெட்களை இழந்து 89 ரன்கள் மட்டுமே சேர்த்து டிக்ளேர் செய்துள்ளது. இதையடுத்து இந்தியாவுக்கு இலக்காக 56 ஓவர்களில் 276 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.